Thursday, December 3, 2009
நெஞ்சம் பொறுக்குதில்லையே! இந்த….
ஒரு நாட்டில் வாழும் பெரும்பான்மையான இனம் ஒன்று அந்த நாட்டினை வாழும் மற்ற சிறுபான்மை இனங்களை ஒடுக்க முற்படும்போது, ஒன்று அரசியலமைப்பு அதை தடுக்கவேண்டும், இல்லை என்றால் சட்டம் அதை தடுக்கவேண்டும்.
இந்த இரண்டும் நசுக்கப்படும் சிறுபான்மை இனத்திற்கு பாதுகாப்பு வழங்காமல், பெரும்பான்மை இனத்திற்கு, ஆதரவாக தம் பங்கிற்கும், சிறுபான்மை இனத்தினருக்கு எதிராக மேலும் நடந்துகொண்டால் அந்த நாட்டில் நடப்பது அரச பயங்கரவாதமே என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.
சிறுபான்மை இனங்கள் நசுக்கப்படுவது என்பது இன்று நேற்று திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படும் ஒன்றல்ல, கால காலமாக பரம்பரை பரம்பரையாக அது வளர்கக்கப்பட்டு சிறுபான்மை இனம் முற்றாக அழிக்கப்படும்வரை தொடர்ந்துகொண்டே இருக்கும்.
இரு இனம் அந்த நாட்டில் இருந்தே துடைத்தொழிக்கப்படவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கும் பெரும்பான்மை இனத்தின் மனப்போக்கினை உடனடியாக மாற்றம் செய்துவிடமுடியாது.
அதேவேளை அந்த பெரும்பான்மை இனம், அடக்கப்படும் இனம் வீறு கொண்டு எழும்போது தன் ஒரு கண் போனாலும் பறவாய் இல்லை, சிறுபான்மை இனத்தின் இரண்டு கண்களும் போகவேணடும் என்ற நிலையினையே எடுக்கும்.
ஒரு இனத்தினை அழிப்பது மட்டும் இனச்சுத்திகரிப்பு ஆகிவிடாது. அந்த இனத்தின், சமய, கலாசார, பொருளாதார, இலக்கிய, விழுமியச்சின்னங்களையும் இல்லாது ஒழித்தாலே அது முழுமையான சுத்திகரிப்பாக திகழும்.
இந்த நிலையில் பிரித்தானியக்காரர்களின் வெளியேற்றத்தின் மறுகணமே தனது பெரும்பான்மை இன உணர்வை காட்டத்தொடங்கிய இலங்கை சிங்கள இனம், அங்கு வாழும் தமிழ் இனத்திற்கு செய்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமில்லை.
அவை மறக்கவோ, மன்னிக்கவோ கூடியவைகளும் இல்லை என்பதே வெளிப்படை உண்மை. எந்தவொரு காரணத்திற்காகவும் ஒரு ஊசிமுனை நிலத்தைக்கூட தமிழர்களுக்கான தீர்வாக சிங்கள ஆளும் எந்த அரசும் எந்தக்காலத்திலும் வைக்கபோவதில்லை. இதுவே வெளிப்படையான உண்மை.
என்ன கொடுமை என்றால் கேடுகெட்ட தமிழனின் குணமே, எவற்றையும் உடனடியாக மறந்துவிடுவதும், மீண்டும் மீண்டும் நல்லது நடக்குமென்று கனவுகாண்பதுமே ஆகும்.
ஒன்றை மட்டும் நினைத்துப்பாருங்கள், தமிழர்களுக்கு எந்தக்காரணத்தினை கொண்டும் நிரந்தரமான தீர்வினை கொடுத்துவிடக்கூடாது என்பதில் சிங்களவர்கள் எவ்வளவு உறுதியாக உள்ளனர். ஆனால் எமக்கு ஒரு நிரத்தரத்தீர்வு (அது தனிநாடே தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதில் எனக்கு வேறு கருத்துக்கள் இல்லை) வேண்டும் என்பதில் தமிழர்கள் உறுதியாக உள்ளனரா?
உயிரையே உருகச்செய்யும் தமிழனின் உணர்வு மிக்க ஒரு புனிதமான நாளை, கேவமாக சொல்கின்றான் சிங்களவனின் காலை நக்கி, அமைச்சன் என வாழ்வுவாழும்; ஒரு ஈனப்பிறவி.
சரி நான் விடயத்திற்கு வகின்றேன். ஊரே பத்தியெரிந்து. அப்பனும். மாமனும், தங்கையும், மச்சானும் எரிந்த சாம்பல் காயவில்லை, ராஜப்கஸவை அதரிப்பதா, சரத் பொன்சேகாவை ஆதரிப்பதா? அதாவது என் சொந்தங்களை கொன்றவனை ஆதரிப்பதா? கொல்லச்சொன்னவனை ஆதரிப்பதா? என தமிழ்கட்சிகளும். தமிழ் ஊடகங்களும், ஏன் சில பதிவர்களும் ஆராய்கிறார்கள் என்றால்! உண்மையில் எனக்கு நாக்கை புடுங்கிக்கொண்டு சாகலாம்போல இருக்கின்றது.
பாவிமக்களே..உங்களுக்காகவா! 30 வருடங்களுக்கு மேலாக ஊண், உறக்கம் இன்றி, ஆசைகள், அபிலாசைகளை துறந்து, ஏன் தம் சந்ததிகiளையே உயிர் ஆகுதியாக அர்ப்பணித்து இத்தனை பேர் வீர காவியமானார்கள்?
உங்களுக்கு மனச்சாட்சி இல்லை? எழுத கைகள் கூசவில்லை?
உங்கள் அண்ணன். தம்பி, தங்கை, மச்சான், மாமன்களின் புனிதமான அர்ப்பணிகள் மறந்துபோய், இப்போ ராஜபக்ஸவும், சரத்பொன்சேகாவும் உங்களுக்கு புது மாமனும் மச்சானுமாகப்போச்சா?
இது தான் உங்கள். ஜனநாயகம், இது தான் உங்கள் நாகரிகம், இது தான் உங்கள் அரசியல் நிரோட்டம் என்றால், அப்படி ஒரு கேவலம் கெட்ட ஜனநாயகம், நாகரிகம், அரசியல், நீரோட்டம் என்னைப்போன்றவர்களுக்குத்தேவையில்லை.
Labels:
ஈழம்,
தமிழ் உணர்வு,
தமிழ்விரோதிகள்,
வெறுப்பு,
வேதனை
Subscribe to:
Posts (Atom)