Saturday, July 24, 2010
நான் வருவேன் மீண்டும் வருவேன்.
அண்ணைமார், கண்டிப்பாக அக்காமார் ஏன் எண்டால் அண்ணைமாரைவிட அதிகமான அக்காமார்தான் என்ரை பதிவுகளை விரும்பி படிக்கினம் என்று பல பல சர்வேகள் சொல்லுது. அடுத்து இப்ப எங்களுக்கே படிப்பிக்க வெளிக்கிட்டிருக்கும் தம்பியவை மற்றும் தங்கச்சிமார் அனைவருக்கும் நீண்ட நாட்களின் பின்னர் உங்கள் அன்புக்கும், பாசத்திற்கும், பட்சத்திற்கும், பெருமதிப்புக்கும் உரிய தவறணையான் மீண்டும் வந்திட்டன் என்று அறியப்படுத்திக்கொள்கின்றேன்.
உலகப்படத்தில இந்த நாடு எங்க இருக்கு, இந்த சமுத்திரம் எங்க இருக்கு எண்டு, சமுகக்கல்வி படிப்பிச்ச வாத்தி லொள்ளு பண்ணேக்கையே, ஹெய்ரோவைக்கொண்டுபோய் அவுஸ்ரேலியாவில குறிச்ச நாங்கள், வாத்தி குறிக்கச்சொன்ன நாடுகளில எல்லாம் நிண்டு நிண்டு ஒருமாதிரி, எங்கட குடும்பத்தினர் உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்தம். அதுதான் இந்த இடைவெளி.
மண்ணை விட்டு பிரிஞ்ச சோகங்கள், இங்க வந்தால் 100 மடங்கு ஆகுது. எங்கடா நான் ஆழுதிடுவேனோ என்று ஒரு ஓரமாய்ப்போய்ப்பார்த்து சுருண்டுகொண்டு படத்திருந்தநேரம், பாழாய்ப்போன ரேடியோக்காரன் ஒருவன், ஓ…தென்றலே என் தோழில் சாயவா, தாய் மண்ணின்…என்று போகும் பாட்டை போட்டான் பாருங்கோ உண்மையில அழுதுபோட்டன். முக்கியமாக என்ரை தவறணையை நினைத்து.
இனிமேல் அந்த அற்புதமான கள்ளு எனக்கு கிடைக்காதுபாருங்கோ, ஜொனிவோக்கரும், வற்றும்; எங்களை ஒன்றும் செய்யமுடியாதுபாரங்கோ, அந்த அற்புதமான தெய்வந்த பல்மேறா மில்க் போல எதுவும் கிடையாது.
சரி..விசியத்திற்கு வாறான். கன நாள் இந்த கோதாரில விழுந்த வலைப்பக்கம் நான் எழுதவரவில்லை என்றாலும், பெருமதிப்புக்குரிய இனிய நண்பர்களான , தங்கமுகுந்தன் அண்ணா, அடலேறு அண்ணா, நிலாரசிகள் அண்ணா, ஜனா அண்ணா, கேபிள்கொழுவுற அண்ணா, நம்ம தோஸ்த்து சயந்தன் ஆகியோரின் வலைப்பதிவுகள் மூலம் கருத்துக்கிறுக்குகள் மூலம் எல்லாரையும் என்ட இருப்பை மறந்துபோகமல் இடைக்கிடை வச்சுக்கொண்டுதான் இருந்தனான். இந்த விசியத்தில எனக்கு மாஸ்டர் பிறைன்.
அட இந்த நாசமறுப்பான் யாழ்ப்பாணத்தில நிண்டே அறம்புறமாய் எழுதித்துலைத்தவன் இப்ப வெளிநாட்டில நிக்கிறான் என்வெல்லாம் எழுதப்போறானோ என்று பலபேர் நினைப்பியள் நியாயமும்தான். நான் இனிமேல் நம்மட நிலா ரசிகன் அண்ணாபோல, அடலேறுபோல கட்டுரை, கவிதை எல்லாம் எழுதி, அப்புறம் நம்ம ஜனா அண்ணைபோல ஆராய்ச்சித்தொடர்களை எழுதி, சயந்தன்போல எழுதி பிறைஸ்வாங்கி என்றெல்லாம் திட்டமிட்டிருக்கின்றேன்.
பார்ப்பம் எல்லாம் சுகம்வரும். (ஆளும் தப்பும்)
நான் இந்த இடத்தை வந்து சேர்ந்தவுடன பல்கலைக்கழகத்தில எங்களை ராக் பண்ணின பெடியள் கனக்கபேர், திரிந்தாங்கள், ஓகோ…இப்ப இங்க வந்து சேர்ந்ததிலையும் நான் ஜூனியர்தானே இதற்கும் ராக் பண்ணப்பொறாங்களோ என்று ஒரு கிழமையாய் ஒழிச்சோடித்திரிந்தேன். பிறகு அநியாயம் சொல்லக்கூடாது பெடியங்கள் கனக்க உதவிகள் செய்தாங்கள்.
அது சரி யாழ்ப்பாணத்தில கோல்லீவ் என்ன விலை ஜனா அண்ணை?
என்ன திடீர் என்று வந்த இடமாற்றம் மனசுக்க என்மோ செய்து. சில பல பிரிவுத்துயர்கள் நெஞ்சை புழியுது. அங்கை அவளவைக்கு புழியுதோ இல்லை புரியுதோ தெரியாது. சரி..இனி என்ன எல்லாரையும் அடிக்கடி வலைப்பதிவுகளிலும், முகநூல்லையும் சந்திக்கிறன்.
Till than Take Care Bye.. Bye (அதுதான் இங்கிலீசு பேசுற நாட்டுக்கு வந்திட்டமில்லை)
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
"ஏன் இந்தக்கொலை வெறி" அண்ணனிட்ட ஒரு பக்கட் வாங்கி அனுப்புங்க என்று மெயில் போட்டா வாங்கி அனுப்பமாட்டேனா என்ன?
சரி..இங்க 20ரூபா. மீண்டும் தவறணைத் திறப்புக்கு நன்றிகள். வாழ்த்த்துக்கள்.
தொடர்ந்து செல்வோம்...
வந்திட்டீங்களோ? வெல்கம் வெல்கம்
மீண்டும் வந்தமை மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் பாணியிலேயே எழுதுங்கள். அதுதான் எங்களுக்கும் பிடிக்கும்
Welcome Back Thavaranai.
Hi..Buddi..U coming Back na?
waaw.. Welcome.
//கண்டிப்பாக அக்காமார் ஏன் எண்டால் அண்ணைமாரைவிட அதிகமான அக்காமார்தான் என்ரை பதிவுகளை விரும்பி படிக்கினம் என்று பல பல சர்வேகள் சொல்லுது//
சர்வே உண்மை போலதான் இருக்குது. மீள்வரவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே.
Tavern visit is very interesting, I felt being in Jaffna while going through your writing also felt had bit of male palmyrah toddy. Cheers!
Keep it up! , more to hear from you.
கலக்குங்க டிலான்...
//.....பெருமதிப்புக்குரிய இனிய நண்பர்களான , தங்கமுகுந்தன் அண்ணா, அடலேறு அண்ணா, நிலாரசிகள் அண்ணா, ஜனா அண்ணா, கேபிள்கொழுவுற அண்ணா, நம்ம தோஸ்த்து சயந்தன் ஆகியோரின் வலைப்பதிவுகள் மூலம் ...//
அதெப்படி? நான் இன்றுவரை உம்மைப் பார்க்கவுமில்லை பழகவுமில்லை சரி அதுவும் போனால் தொலைபேசியில்ட இதுவரை கதைக்கவுமில்லை! ஏன் எனதுபெயர் முதலில் வந்தது? அவ்வளவு அளவுகடந்த நட்போ! உண்மையிலேயே என்னுடைய கிருத்தியத்தில் எழுதிய கட்டுரையை திரும்பவும் வாசித்து உறுதிப் படுத்துகிறேன்!
சரி விசயத்துக்கு வருகிறேன் மீண்டும் வருவேன் எங்கே? எப்போது? எப்படி?
இந்தியாவுக்கு வந்தபோதும் சந்திக்கவில்லை - ஜனாவிடம் உமது தொலைபேசி இலக்கத்தைக் கேட்டுப் பெற்றிருந்தாலும் இலங்கையில் இருக்கும்போது பேசமுடியவில்லை. இப்போதாவது உமது தொலைபேசி இலக்கத்தை அனுப்பும்!
Post a Comment