Wednesday, August 4, 2010

தமிழ் பதிவர்களுக்கு உலகநாயகன் ஒபாமாவின் பிறந்தநாள் பார்ட்டி



அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு இண்டைக்கு பிறந்தநாள் என்று அறிந்தேன் கண்டியளோ. நாங்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிச்சு அந்த மனுசனுக்கு கேட்கப்போகுதோ எண்டு எண்ணம் கொள்ளாமல் தமிழ் பதிவர்கள் அனைவரினதும் சார்பாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தவறணை தெரிவித்துக்கொள்ளுதுங்கோ.
தமிழ் பதிவர்கள் என்றவுடன், சென்னைப்பதிவர்கள், மதுரைப்பதிவர்கள், கோவைப்பதிவர்கள், இலங்கைப்பதிவர்கள், அமீரகப்பதிவர்கள், அப்பிடி உப்பிடி என்று பிரிந்து நிண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை எட்டிப்பார்க்காமல் தமிழ் பதிவர்கள் எண்ட ஒரே கொடியில ஒரு பார்ட்டி வைப்பம் வாருங்கோவன்.

பார்ட்டி வைக்கிறதுக்குத்தானே காரணத்தை கண்டுபிடிக்க எங்கட ஆக்கள் சிரமப்படுறவை. உலகத்தலைவருக்கே பிறந்தநாள் எண்டால் சும்மா பாட்டியா என்ன?
இண்டைக்கு தவறணைக்கு வந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தை எட்டிப்பார்க்கிறவை எல்லோருக்கும் உடன் கள்ளு எவ்வளவு வேண்டும் என்றாலும் இலவசம்….இலவசம்….இலவசம், கள்ளு வேண்டாம் என்கிறவைக்கு கோக், பன்டா, ஸ்பிரைட் (ஒன்லி கோக் பிரான்ட்ஸ்) தரப்படும்.
அதோடு ஆட்டு இரத்தவறை, கருஞ்சுண்டல், குடல்கறி, சிக்கன் பாயா, சில்லி சிக்கன், நெத்தலி பொரியில் அனைத்தும் கேட்கப்படும் அளவுக்கு கொடுக்கப்படும்.
இது கள்ளு அருந்துபவர்களுக்கு மட்டுமே தரப்படும், பிறகு வந்து சண்டை கிண்டை பிடிக்கக்கூடாது என்று முதலே சொல்லிப்போட்டன்.

அடுத்து முக்கியமான விடயம் ஒன்றை முதலே சொல்லிப்போடுறன். கனக்க பெடியங்கள் இப்ப கவிதைகள் எழுதத்தொடங்கியதால “ஒபாமா நீங்கள் நல்லவரா, கெட்டவரா” என்ற தலைப்பில கவியரங்கம் இடம்பெறும், பிரபல கவிதை எழுதும் பதிவர்கள் இதில் உடனடியாக வந்து கலந்துகொள்வார்கள். அடித்த போதை இறங்க ஒரு கெட்ட செய்தி நானும் கவிதை வாசிக்கப்போறன்.
அதை தொடர்ந்து ஒபாமா பற்றி பதிவர்களே எழுதி, ரீயூன்போட்டு, பாடி, ஆடி உடனடியா வீடீயோ பிடிச்சு சி.டி. ரிலீஸ் பண்ணி உடனடியாக டி.எச்.எல் இல ஓபாமாவுக்கு அதை அனுப்பி வைக்க உத்தேசம் பாருங்கோ.

அடுத்து பதிவர்கள் சார்பாக பிறந்தநாள் பிரகடனம் நிறைவேற்றப்படவுள்ளது படு முக்கியமான விசயமுங்கோ.
பிரகடனம் என்னவென்றால்
அடுத்த வருடம் சிக்காக்கோவில செம்ஆங்கில மொழி மாநாடு நடத்தப்படவேண்டும். அதற்கு தமிழ் பதிவர்கள் அனைவருக்கும் அமெரிக்க விசா வழங்கவேண்டும்.
திரும்பி போ என்று சொல்லக்கூடாது.
தமிழ் பதிவர்கள் மாநாடுமுடிந்தும் போகாதுவிடத்து, அவர்களுக்கு நியூயோர்க்கிலோ, அல்லது லொஸ் ஏஞ்சல்ஸிலோ தமிழ்பதிவர்கள் சிட்டி ஒன்று அமைத்து கொடுக்கப்பட்டு
அவர்களையும் அமெரிக்க குடிமக்களாக கருதப்படவேண்டும்.
இவை மறுக்கப்படும் பட்சத்தில் அமெரிக்க ஜனாதிபதி பற்றியும், அமெரிக்கா பற்றியும் படு கேவலமாக தாறுமாறாக எழுதுவோம் என்று இத்தாள் சகல பதிவர்களும் உறுதியளிக்கின்றோம்.
சரி விசியம் இவ்வளவுதான் பாட்;டி தொடங்கப்போகுது கெதியா ஓடி வாங்கோ..

ஓ…சாரி..மறந்து போட்டன்..
Happy Birthday Mr.President

4 comments:

சயந்தன் said...

"ஒபாமா நீங்க நல்லவரா கெட்டவரா " கவியரங்கத்தில உங்கள் கவிதையை கேட்க ஆர்வமாக உள்ளது.

Jana said...

அடடா..இன்று உண்மையாகவே ஒபாமாவின் பிறந்தநாளா? பதிவு நல்ல பகிடியாத்தான் இருக்குது. நடக்கட்டும் Party

Dushi said...

Very Nice Post Mr.Dilan.
I like your way of writing
it is very Fun

ம.தி.சுதா said...

ஆஹா டிலான் ஒபாமாவிற்கு அந்தரங்க காரியதரிசி வேணுமாம் போறிங்களா?