Wednesday, November 11, 2009

பிடித்த பத்து


தவறணைக்கு வந்து கதைச்சால் பிரச்சனை வாறதுகளில ஒன்று இந்த பிடிக்கும், பிடிக்காது என்ற விசியம். ஒருதர் ஒன்றை பிடிக்காது என்று சொல்ல, ஏன் மச்சான் அப்படி சொல்லறாய்? என்று கேட்டு ஆரம்பித்த தொடங்கி பேந்து, தவறணை முகடுகள் பிரிக்கப்பட்ட பல கதைகள் இருக்குது பாருங்கோ.
இருந்தாலும் ஜனா அண்ணை, அன்போட அழைக்கேக்க, அதை செய்துமுடித்துப்போட்டுத்தானே மற்றவேலையை பார்க்கோணும்.
என்ன பிரச்சனை எண்டாலும் பறவாய் இல்லை.

நடிகர்களில எனக்கு சிவாஜிகணேசன்தான் பிடிக்கும், பிடிக்காத நடிகர் விஜய்தான்.

நடிகைகளில மனோரமாதான் பிடிக்குமுங்கோ உண்மையாலும். பிடிக்காத நடிகை சிரேயா..இவவிண்ட மியாவ். மியாவ் பூனை ஆட்டத்தை பார்த்தே முடிவு பண்ணிட்டன்.

பிடிச்ச எழுத்தாளர் அகிலன், பிடிக்காத எழுத்தாளர் துக்லக் சோ

பிடிச்ச புலவர் ஓளவையார்தானுங்கோ, பிடிக்காத புலவர் ஒட்டக்கூத்தன்.

பிடிச்ச நிறம் எப்பவும் எனக்கு வெள்ளைதான் (நான் என்ன பாலா கள்ளா?) பிடிக்காத நிறம் நாவல்.

பிடிச்ச பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்தான், சகிக்காத பாடகர் நான்தான்.

பிடிச்ச கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுதந்தரம், பிடிக்காத கவிஞர் “நான் அடிச்சா தாங்கமாட்டாய்” போன்ற அருமையான பாட்டுக்களை எழுதுறவைகள்;.

பிடிச்ச இடம் நூலகம், பிடிக்காத இடங்கள், புதுசா முளைக்கிற மனிதக்கடவுளுகளை கும்புடுறத்துக்கு கட்டப்படும் கட்டடங்கள்.

பிடிச்ச குணம் அன்பு, பிடியாத குணம் அகங்காரம்.

பேச்சாளர்களில பேராசிரியர் பெரியார்தாசனைத்தான் ரொம்ப பிடிக்கும்.
பிடிக்காத பேச்சாளர் என்றால் கம்பவால்தான்.

இந்த பிடிச்ச பத்துக்களும், பிடிக்காத பத்துக்களும் காணும் எண்டு நினைக்கிறன்.
இதை இன்னார்தான் தொடருங்கோ என்று சொல்லமாட்டன். விரும்பினவையள் தொடர்ந்து உங்கட விருப்பு வெறுப்புக்களை எழுதுங்கோ, ஆனா நல்லா சைக்கோலொஜி தெரிஞ்சவன் எவனாவது எல்லாத்தையும் வாசித்தான் என்டா, ஒவ்வொருத்தரை பற்றியும் பக்காவா சொல்லிப்போடுவான் கண்டியளோ…

5 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

nice

தங்க முகுந்தன் said...

உம்மோட கதைக்க எவ்வளவோ முடிஞ்சவரை பாத்தன்!
முடியேலை! விசரர்கள் சந்திக்கப்படாதெண்டு மேல இருக்கிறவன் நினைக்கிறானோ தெரியல்லை! என்ன விசயமெண்டால் எங்கட பனங்கொட்டைப் பாசையை கொஞ்சம் தெளிவா - தனியா ஒரு போடு போடுங்கோவன்! சந்ரு எழுதியதில கனக்கத்தைக் காணேலை! அவரோட கதைச்சனான்! அப்ப சொன்னனான் உம்மட கதைதான் இப்ப எனக்குத் தெரியிற யாழ்ப்பாண சுத்தத்தமிழ் எண்டு! கொஞ்சம் பாத்துக்கீத்து எழுதுமன்! என்ன சரியே! கோவிக்காதையும்!

Jana said...

நல்லாயிருக்கு டிலான். அப்புறம் அந்த கடைசி சைக்கோலொஜி விசியம் சூப்பர். உண்மையும்கூட

தங்க முகுந்தன் said...

என்னவோ சொல்ல வேண்டுமென்று மனசில் பட்டது! யோசிச்சுப் பாத்தன்! இன்றைக்குத்தான் பளிச்சிட்டது! பிடித்த பத்து - மாணிக்க வாசகர் திருவாசகம் அல்லோ! ம்....சிக்கெனப் பிடித்துள்ளீரோ! இருக்கட்டும்! பிறகு பாக்கிறன்!

அடலேறு said...

நல்லா இருக்கு பிடிச்ச பத்து