Sunday, November 8, 2009
ஏன்டாப்பா கடைவைச்சாய்..
புழனிச்சாமி பெத்தவனே
பழஞ்சோறு தின்றவனே
மத்தியானம் ஆகுமுன்னே
தவறணையில் வேலை என்ன?
என்ன பாவம் செய்தாய்
இங்க வந்து சினேகிதன் ஆனாய்.
அடேய் என் தேவாங்கே
உளராமல்த்தான் சொல்லேண்டா
என்ன சொன்னா??
தேப்பன் வளவினிலே
குள்ளுவிக்கத் தொடங்கியாச்சா?
எட்டிப்பார்க்கையில கூட்டம் குவிஞ்சிடுச்சா?
ஐயோ ஐயையோ அடிவயிறு எரியுதடா
தவறணைக்கு போட்டி என்ன?
பேரிழவு வந்ததென்ன?
கள்ளு புளிச்சதென்ன?
நாசமாப்போனதென்ன?
காலையில் பதனியும்
மாலையில் உடன்கள்ளும்
குடிச்சிட்டு போகனும் என்று
நாட்கணக்காய் காத்திருந்தும்
கடைக்கள்ளு கிடைப்பதற்கே
நாலு நாட்கள் ஆகுதிற்போ..
இந்த லட்சணத்தில்
ஏன்டாப்பா கள்ளுவிக்க முடிவெடுத்தாய்?
கிடுகோலை, மண்குந்தே
கோப்புறேசன் கொடுத்தவரம்
பாடையில போவானே
நான் காசுக்கு எங்கபோக?
காசுவேண்டும் என்றால்
ரொரன்டோக்கு கோல்வேணடும்
கோல்போட வேண்டும் என்றால்
றீச்சாச்சு பண்ணவேண்டும்
மூத்தமகன் லாச்சப்பல்
இளையமகன் விம்பிலி
இந்த லட்சனத்தில்
என்பாடோ பெரும்பாடு
தவறணைக்கு வந்தவுடன்
முட்டி கானில் ஊத்தமுன்னர்
கொண்டுவந்த முழுக்கள்ளும்
கொண்டாட்டமா குடித்துவந்தேன்
காலையில ஒரு போத்தல்
மதியத்தில் 2 போத்தல்
மாலையில 3 போத்தல் என்ற ஓடர் புரியலையோ?
கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வருவது
ஒன்றும் புதுசில்லை உலகத்தில் உள்ளதுதான்!
கைநிறைய காசிருக்கும் போது இந்த
பாதகத்து வளவுக்கடை திறக்குதென்றா
பேசாமல் இருந்திருப்பன்
ஐந்துகள்ளு போத்திலுக்கே
ஐந்து தரம் மனிசியிடம் அடிவாங்கி
கஸ்டப்பட்டு குடிக்கேக்க
இன்னும் ஒரு கடை வந்தா
குத்தாம என்னபண்ண?
ஊரினில இன்னும் ஒரு
குள்ளுக்கடை வந்தது செய்தியானா
இளையபெட்டை தடுப்பாளே
அடுத்தவக முறைப்பாக
இந்த ராத்திரிக்கு இராத்திரியே
ரகசியமா கடையடைத்து
நாளைக்கே பின்னால எடுத்துவை
யாருக்கும் தெரியாமல்.
என் ரோட்டுவழி போகையில வீட்டடியில் நிற்காதே
அடேய் உன் புதுக்கடை பற்றி
என் வீட்டு நாய்க்கும் சொல்லாதே!
(அட எங்கயோ படித்த கவிதையின் தொனி என்டுதானே யோசிக்கிறியள். யூ ஆர் கரக்ட். வடகப்பட்டி கவிஞரின் “ஏன்டியம்மா குத்தவச்சா” கவிதையின் உள்ட்டாதானுங்கோ இது)
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு.தவறணையில கூட்டம் கூடுது டிலான் அசத்துங்க....
நல்ல கவிதை...
உங்கள் தமிழ் அழகாக, எங்கள் தமிழில் அழகாக இருக்கிறது...
தொடர்ந்து எழுதுங்கள் சகோதரரே....
வாழ்த்துக்கள்....
அன்னம்மா பெத்தவளே! ஆடுமேய்க்கப்போனவளே!! அப்படியே பழனிச்சாமி பெத்தவனே, பழஞ்சோறு தின்னறவனே!! என பக்காவா பொருந்தியுள்ளது.
சிறப்பாக உள்ளது டிலான். வாழ்த்துகள்.
Anthmathiri :) :).
Bravo
படிக்க சுவாரகசியமாகவும், நகைச்சுவையாகவும் உள்ளது நண்பா. வாழ்த்துக்கள்.
Post a Comment