Wednesday, November 4, 2009
தவறணைத் திறப்புவிழா
எல்லோருக்கும் தவறணையின் அன்புகலந்த வணக்கங்கள்.
முதலிலே என்னை பற்றிய சிறிய ஒரு அறிமுகம்.
எனக்கு கவித்துவமாகவும் இலக்கிய நயமாகவும் எழுதவராதுங்கோ, அது நமக்கு வெகுதூரமுங்கோ, ஆனா “தமிழுக்கு வந்தசோதனையாக” எனக்கும் தமிழில் தட்டச்சி வலையில் பொறிக்க தெரியும். மனதில் என்ன தோணுதோ அதை அப்படியே சொல்லிவிடுவதுதாங்கோ எனது பழக்கம். இப்ப தனிமை வாட்டுவதாலையும், இணையவசதி வீட்டில் உள்ளதாலையும், பல கூட்டாளிகள் வலைப்பதிவுகள் வைத்திருப்பதாலும், நானும் ஒருக்கா எட்டிப்பார்ப்பம் எண்டு வந்தேனுங்கோ.
என்ரை கருத்துக்களையும் சிலராவது கேட்டு பதிலளிக்கவேண்டும், என்ற மன ஆசைகளாலும், என்ர பதிவுகளும் இணையத்தில் உலகம் முழுதும் வலம்வரவேண்டும் என்ற ஆசைகளாலும்தானுங்கோ பலபேர் வலைப்பதிவுகளை எழுதினம். ஒரு வகையில் இதுகள் நல்ல விடயமும் தானே?
எனக்கெண்டால் கற்பனை பண்ணி கதை எழுதவோ, அல்லது காத்திருந்து கவிதை எழுதவோ தெரியாது, ஆனா கண்ணால கண்டவைகள், காதுகளில் விழுந்தவைகள்,
ஊடகங்களில் அறிந்தவைகளை என்ர நடையில எழுத முடியும்.
“இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை” என்று பாலய்யா ஸ்ரைல்ல பலபேர் யோசிக்கிறது எனக்கு புரியுது.
அப்புறம் என்னடா தவறணை என்டு பெயர் என்று உங்களில் பலபேர் கேப்பிங்கள்.
கள்ளு விற்கும், கள்ளு குடிக்கும் தவறணைகளில்த்தான் பல விசியங்கள் காதில விழும் பாருங்கோ, சுப்பையாவின்ரை பேத்திய, காத்திகேசின்ற பேரன் கூட்டிக்கொண்டு ஓடினதில இருந்து, ஓபாமாவின்ட நாய்க்குட்டி மட்டும் கதைகள் சுவாரகசியமாக நடக்கும். அதுதான் இந்த பெயரை வச்சேன்.
இனி..வலைப்பூக்களை மேய்ந்துகொண்டு போகேக்க ஒரு எட்டு இந்த தவறணைப்பக்கமும் வந்துடோனும் கண்டியளோ!
உரிமையுடன்
உங்கள் டிலான்.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
வெறியோடதான் வந்திருக்கிறீங்க போல.. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பொதுப்பணி..
இந்த தவறணை வித்தியாசமாக இருக்கும்போல தெரிகின்றது. தொடர்ந்து தவறணை "களை கட்டட்டும்" வாழ்த்துக்கள்.
ம்ம்ம்...தவறணையின் திறப்புவிழாவே அமர்க்களமாகத்தான் இருக்கு. யாழ்ப்பாண எழுத்துநடை சொக்கவைக்கின்றது.
கண்டிப்பாக அடிக்கடி இந்த தவறணைப்பக்கம் எட்டி பார்க்கின்றேன். திறப்பு விழாவுக்கு வாழ்த்துக்கள்.
கலக்குங்க டிலான் தவறாம தவறணைக்கு வர நாங்க தயார். அருமையான தலைப்பு ஐயா.
வாழ்த்துகள்!!
/ஆனா கண்ணால கண்டவைகள், காதுகளில் விழுந்தவைகள்,
ஊடகங்களில் அறிந்தவைகளை என்ர நடையில எழுத முடியும்./
நல்லா எழுதுங்க!! :-)
பெயர்க்காரணமே பலமா இருக்கு!!
நண்பன் ஜனா மூலம் உங்களுடைய தவறணைக்கு வந்தேன்!
என்ர நடையில எழுத முடியும் - அந்த நடைதான் எனக்குப் பிடித்திருக்கிறது!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் டிலான், அலுவகத்துல கொஞ்சம் வேளை பளு அது தான் பின்னூட்டமிட முடியவில்லை. அழகா வடிவமைக்கபட்டிருக்கு தவறனை. நிரப்ப எழுதுங்க.மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள் இனி வர இருக்கும் அனைத்து படைப்புகளுக்கும்.
அட்பொக்ஸ், தினேஸ், சயந்தன், ஜனா அண்ணா, ராகவன், சந்தனமுல்லை, தங்கமுகுந்தன் அண்ணா, அடலேறு
உங்கள் அனைவரையும் தவறணையின் நெருங்கிய நண்பர்காளக கொண்டதில் பெரு மகிழ்வு எய்துகின்றேன்.
திறப்பு விழாவிலேயே வந்து சிறப்பித்து உதவிய உங்கள் அனைவருக்கும் தவறணை கடமைப்பட்டுள்ளது.
நன்றிகள் நன்றிகள்.
Post a Comment