Friday, November 13, 2009

தவறணையில க்கியூவரிசை..

பேரன்பு மிக்க பெரியோர்களே, தாய்மார்களே, அண்ணன் தம்பிமாரே, அக்கா தங்கைமாரே.. வணக்கத்துடன் நான் சொல்லிக்கொள்வது என்வென்றால்..!!
இன்று தவறணையின்ட தலையங்கத்தை பார்த்திருப்பியள், என்னடா இவன் வழமையாக அலட்டுறமாதிரி தவறணையில குடிக்க க்யூவரிசை நிற்குது என்று எழுதுறான்போல என்று நினைத்தால், அங்கதான் நீங்க பிழைவிடுறியள்.
தலையங்கத்திலதான் நான் சொல்ல வந்த விசியம் அடங்கியிக்கு பாருங்கோ..
இன்னும் விளங்காட்டி இந்த “க்கியூவரிசை” தானுங்கோ அது!!

எங்கட ஆக்களில ஒரு பழக்கம் ஒன்று இருக்கு பாருங்கோ, கதைக்கேக்ககூட பல ரெட்டைபதிவுகளை அறியாமலே செய்துபோடுவினம். வித்தியாசமாக ஒரு கதை காதுவழிய வந்தால் உடன அதை திருவாய்களால் மொழிய வெளிக்கிட்டுப்போடுவினம்.
அட நாங்கள் கதைக்கிறது சரியோ, தப்போ என்றுகூட கணக்கில எடுக்கிறதில்லை, தங்கட பாட்டுக்கு அடுக்கிக்கொண்டே போறது.
இப்படி எங்கட கதைகளில பெரும்பாலும், ஒரே அர்த்தத்துடன் இங்கிலீசையும் தமிழிழையும் சேர்த்து கதைக்கும் பழக்கம் நான் உட்பட உங்களில பலபேருக்கு இருக்கும் கண்டியளோ.. கொஞ்ச சொல்லுகளை எடுத்துவிடுறன், நீங்கள் சொல்லுறனீயளோ இல்லையோ என்று ஒருக்கா சொல்லிப்பாருங்கோவன்..

பின்றிவேஸ்
கச்பிடி
நடுசென்ரர்
போஸ்ட்கட்டை
லைட்டுவெளிச்சம்
ஷோக்காட்டுறார்
க்கியூவரிசை
பொக்ஸ்பெட்டி
சவப்பெட்டிக் கொபின்
மதர்அம்மா
இப்படி அடக்கிக்கொண்டே போகலாம்.

இது இப்படி என்டால் இன்னும் ஒரு பகிடி என்னெண்டா, எங்கட சனம் ஒருபொருளாக எது முதலில வந்து “பேமஸ்” ஆகுதோ அதிண்டை பெயரைத்தான் பிறகுவாற எல்லா பிராண்டுக்கும் சொல்லிக்கொண்டே இருக்குங்கள்.
கண்டோஸ் எண்டால் உலகத்தில் இருக்கிற அத்தினை சொக்குலேட்டுக்கும் கண்டோஸ் தான் பெயர் கண்டியளோ! வெளிநாட்டில இருந்து யாராவது வந்தால் அதுகளிட்டயும்போய் “கண்டோஸ்” கொண்டுவந்தனியளோ என்றுதான் கேக்குங்கள் இந்த பேச்சனங்கள்.
அதுபோல சோடா, செல்டல், பாட்டா, கோட்டெக்ஸ், மக்கீ என்று சில பெயர்கள் இந்த சனங்களின்ர மனதில பதிஞ்சுபோட்டுது கண்டியளோ. அதுகளை மாத்துறது வலுங்கஸ்டம்.

அதுபோல இன்னொரு முக்கிமான விசியம் இங்க யாழ்ப்பாணத்தில இந்த லெமினேட் வேலைகளை செய்ய “கிளீன்கட்” எண்ட கடை ஒன்று போட்டு நல்ல பேமஸாக போனது ஒரு காலத்தில கண்டியளோ. ஆனா இண்டைக்கும் சில பெருசுகள், தங்கட ஐலேண்டிக்காட்டை லெமினேட்பண்ண கொண்டுவந்து கேட்குங்கள் எப்படி தெரியுமே??? “தம்பி இதை ஒருக்கா கிளின்கட் அடிச்சு தாறியளே எண்டுதான்”
இப்படி கதைக்கிற விசியங்களில் கனக்க விளையாட்டு இருக்கு கண்டியளோ.

சரி..இண்டைக்கு ஐப்பசி வெள்ளி கடைசி நாளுங்கோ. பின்னேரம் நல்லூர் சிவன்கோவிலில இயம சங்காரம் நடக்கும். முந்தித்தொடக்கம் இயமன் வந்து, சிவகுமாருக்கு.. இல்லை இல்லை, மார்க்கண்டேயருக்கு கயிறுவீசி சிவலிங்கத்துக்குள்ள இருந்து சிவபெருமான் வந்து இயமனை உதைய, இயமன் அப்படியே பின்னால கவுண்டு விழுவதுமட்டும் நின்று பார்ப்பன். பிறகு அன்னவாகனத்தில பிரம்மா வந்து சிவனோட நெகோஷிகேஸன் பண்ணி அவரை உயிர்ப்பித்த உடன, அந்த இடத்தில நிற்காமல் ஓடிடுவன் கண்டியளோ..
எதுக்கும் இயமன் என்னை பார்த்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கைதான்.

8 comments:

Anonymous said...

interesting post

தங்க முகுந்தன் said...

ம்... கலக்கும். அதுசரி ஒருக்கா முடிஞ்சால் கதைக்கலாமே! எப்பவும் வெறியிலயே இருக்கிறனீர்!

Jana said...

அடடா அசத்துறீங்களே டிலான். கச்பிடி, நான் இன்றும் பேசும்பேச்சக்களில் ஒன்று. கிளீன் கட் பற்றி நானும் கேள்விப்பட்டுள்ளேன். கண்டோஸ் மிகச்சரியான உண்மை. வாழ்த்துக்கள் டிலான்.

Unknown said...

ஓம் ஓம்...
நீங்கள் சொல்லுறது சரி தான்...
எங்கட ஆக்கள் உப்பிடித் தான் கதைக்கிறவ...
அதுவும் அந்தக் கன்ரொஸ், பாட்டா விசயத்தில நான் படுற பாடு இருக்கே...
கடவுளே....

சயந்தன் said...

அதுசரி, மிக சுவாரகசியமாக இந்த பதிவை பதிந்ததுக்கு ட்ரீட்டாக எனக்கு கண்டோஸ் எப்ப தரப்போறீர்?
அருமையான பதிவு டிலான் தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

Anonymous said...

keep it up Mr. Thavaranai...good job.

I am so impressed with our peoples' writing especially Jana, Asokparan and yours.

I used to read only Sounth Indian Blogs..now i changed,,,i feel like back home again.

saniyan said...

ரின்சோவையும் சேர்த்துக் கொள்ளலாம் எண்டு நினைக்கிறன். நல்ல பதிவு.

Anonymous said...

ennanai thavaranai sathiyacho